வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 20 டிசம்பர் 2015 (13:36 IST)

கடன்களை திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்: ஒ.பன்னீர்செல்வம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டர்களுக்கு கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை வங்கிகள் நீட்டிக்க வேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டர்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய  ஒ.பன்னீர்செல்வம், வெள்ளச் சேதம் குறித்த முழுமையான ஆய்வறிக்கையை தமிழக அரசு விரைவில் மத்திய அரசிடம் வழங்கும் என்று கூறினார்.
 
சிறு குறு தொழில்கள் மற்றும் விவசாயம் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை வங்கிகள் நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த சுமார் 19 லட்சம் பேரை பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், அவர்கள் 7,150 முகாம்களில் தங்கவைக்கப்பட்டதாக அப்போது ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
 
இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்ட எராளமானவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.