வெள்ள நிவாரண பணிகள்: தமிழக அரசுக்கு சரத்குமார் பாராட்டு


K.N.Vadivel| Last Modified திங்கள், 23 நவம்பர் 2015 (23:14 IST)
வெள்ள நிவாரண பணிகளில் தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து, ராமநநாதபுரத்தில், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் என்பது 3 ஆயிரம் நடிகர்களுக்கான தேர்தல் மட்டுமே. இதை ஊடகங்கள் தான் பெரிய தேர்தல் போல் காட்டி விட்டது.  நடிகர் சங்கத்திற்கு ஆலோசனை தேவைப்பட்டால் வழங்க தயாராக உள்ளேன்.
 
வரும் சட்ட மன்றத் தேர்தலில் வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் தென்காசியில் போட்டியிடுவேன்.  காமராஜர் மணி மண்டபம் 40 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. இன்னும் ஒரு ஆம்டில் காமராஜர் மணிமண்டபம் திறக்கப்படும்.
 
தொடர்கனமழையால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்து, வெள்ள நிவாரண பணிகளில் தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றார். 
 


இதில் மேலும் படிக்கவும் :