மணப்பாறை குப்பைக் கிடங்கில் தீ விபத்து – சாலை வரை பரவிய புகையால் மக்கள் அவதி!

கோப்புப் படம்
Last Updated: வியாழன், 29 அக்டோபர் 2020 (16:46 IST)
கோப்புப் படம்

திருச்சி அருகே உள்ள மணப்பாறைக்கருகே இருந்த நகராட்சி குப்பைக் கிடங்கில் இருந்து தீப் பரவியதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த விராலிமலை சாலை வாகைக்குளம்
பகுதியில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளைக் கொட்டி வருகிறது. இந்த குப்பைக் கிடங்கு முறையாக பராமரிக்கப் படாததால் அங்கிருந்து துர்நாற்றம் பரவி அருகாமை மக்களுக்கு அவதியை ஏற்படுத்தி வந்தது.

இதையடுத்து இன்று அந்த குப்பைகளில் இருந்து திடீரென தீப்பிடித்தது. இதனால் உருவான புகைமண்டலம் சாலை மற்றும் அருகாமையில் இருந்த குடியிருப்புகள் வரை பரவி அங்கிருந்த மக்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தியது. இதையடுத்து தீயணைப்புப் படையினர் வந்து தீயை அணைத்தனர். இதுபோல அடிக்கடி அந்த குப்பைக் கிடங்கில் தீவிபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :