1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2017 (13:16 IST)

ஓபிஎஸ், கமிஷ்னர் ஜார்ஜ் மோதல்?: ருத்ரதாண்டவம் ஆடும் முதல்வர்!

ஓபிஎஸ், கமிஷ்னர் ஜார்ஜ் மோதல்?: ருத்ரதாண்டவம் ஆடும் முதல்வர்!

தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜுக்கும் இடையே எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்ட விவகாரத்தில் மோதல் வெடித்துள்ளதாக தகவல் வருகிறது. இந்நிலையில் ஆணையர் ஜார்ஜ் அதிரடியாக அந்த பதவியில் இருந்து தூக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேறொருவர் அமர்த்தப்பட உள்ளார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.


 
 
தமிழக அரசியலில் ஸ்திரமற்ற சூழல் நிலவுவதால் தனது பலத்தை நிரூபித்து முதல்வர் பதவியை பிடிக்க சசிகலா முயன்று வருகிறார். இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்களை சிறைபிடித்து நட்சத்திர ஹோட்டலில் தங்கவைத்துள்ளார். இதில் சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் துணையாக இருந்ததாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து முதல்வர் பன்னீர்செல்வம் ஆணையர் ஜார்ஜுக்கு போன் செய்து எம்எல்ஏக்கள் கடத்தப்பட்ட உள்ளனர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கூறியுள்ளார். ஆனால் ஆணையர் ஜார்ஜ் அதனை மதிக்காமல் சத்தம்போட்டுவிட்டு போனை பாதியிலேயே துண்டித்துள்ளார்.
 
இதனால் கோபமடைந்த முதல்வர் பன்னீர்செல்வம் டிஜிபி மற்றும் தலைமை செயலாளர்களை தனது இல்லத்துக்கு அழைத்து ஆணையர் ஜார்ஜின் நடவடிக்கை குறித்து சத்தமிட்டுள்ளார். ஜார்ஜுக்கு பதிலாக வேறொருவரை நியமிக்க முதல்வர் மாற்று நபர்களின் பட்டியலை கேட்டுள்ளார்.
 
ஜெ.கே.திரிபாதி, கரன் சின்ஹா மற்றும் சஞ்சய் அரோரா ஆகியோரின் பெயர்களை டிஜிபி பரிந்துரைத்துள்ளார். அதில் சஞ்சய் அரோராவை ஓபிஎஸ் நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த உத்தரவை ஆளுநரின் அறிவுரையை பெற்ற பின்னர் தலைமைச்செயலாளர் இன்று மாலை வெளியிட உள்ளதாக தகவல்கள் வருகிறது.