பேய் பிடித்திருக்கு: மகனை சங்கிலியால் கட்டிப்போட்டு கொடுமை படுத்திய தந்தை


Abimukatheesh| Last Modified செவ்வாய், 14 ஜூன் 2016 (06:46 IST)
தூத்துக்குடி அருகே தந்தை ஒருவர் மகனுக்கு பேய் பிடித்திருக்கு என்று 16 வயது சிறுவனை சங்கிலியால் கட்டிப்போட்டு கொடுமை படுத்தியுள்ளார்.

 

 
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சென்னை-தூத்துக்குடி ரெயில் பெட்டியில் சிறுவன் ஒருவன் காலில் இரும்பு சங்கிலியுடன் அமர்ந்திருந்தான். அச்சிறுவனை மீட்டு ரயில்வே காவல் துறையினர் விசாரித்தனர். விசாரணையில், தந்தை ஜோசப், மகன் சாமுவேல் ஜார்ஜை(16) இரும்பு சங்கிலியால் கட்டிப் போட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாக சிறுவன் தெரிவித்தான். இரும்பு சங்கிலியை கல்லால் அடித்து உடைத்து தப்பித்து, சென்னையில் உள்ள சகோதரி வீட்டுக்குச் செல்வதற்காக ரயிலில் ஏறியதாக சிறுவன் காவல் துறையினரிடம் கூறினான்.
 
இதுகுறித்து அச்சிறுவனின் தாயார் மேரி, அவனுக்கு மனநிலை சரியில்லை, சாத்தான் பிடித்துள்ளது எனக் கூறி கடந்த சில ஆண்டுகளாக கணவர் அடிக்கப்படுவதாகவும், அதை தான் தட்டிக்கேட்டால் எனக்கும் சாத்தான் பிடித்திருப்பதாகத் திட்டுவதாகவும் கூறினார்.
மேலும் மேரி, இனி என்னுடன் அனுப்பினால் எனது கணவர் இவனை கொன்றே விடுவார் எனக் கூறி கண்ணீர் வடித்தார்.
 
இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் ஏற்பாடு செய்து சைல்டு லைனின் உதவி மூலம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் சிறுவன் பின்னர் ஒப்படைக்கப்பட்டான். 
 
 


இதில் மேலும் படிக்கவும் :