தீயாக பரவும் 2000 ரூபாய் கள்ள நோட்டு: உஷார் மக்களே!

தீயாக பரவும் 2000 ரூபாய் கள்ள நோட்டு: உஷார் மக்களே!


Caston| Last Updated: வெள்ளி, 25 நவம்பர் 2016 (15:25 IST)
கருப்பு பணத்தையும், கள்ள பணத்தையும் ஒழிக்க புதிய 2000, 500 ரூபாய் நோட்டை வெளியிட்டு பழைய 500, 1000 ரூபாய் நோட்டை முடக்கியது மத்திய அரசு. இந்நிலையில் புதிய 2000 ரூபாய் நோட்டிலும் தற்போது கள்ள நோட்டு பரவ ஆரம்பித்துள்ளது.

 
 
ஏற்கனவே புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுக்களின் கள்ள நோட்டை கண்டுபிடிக்க முடியாத மக்கள் தற்போது அதிகம் பரிட்சயம் இல்லாது 2000 ரூபாயின் கள்ள நோட்டை எப்படி சீக்கிரம் கண்டுபிடிக்க முடியும்.
 
திருவண்ணாமலையில் டாஸ்மாக் கடையில் 2000 ரூபாய் நோட்டின் கலர் ஜெராக்ஸ் கொடுத்து மது வாங்கி சென்றுள்ளனர். மதுரையிலும் பல இடங்களில் 2000 ரூபாய் கலர் ஜெராக்ஸ் எடுத்து ஏமாற்றியுள்ளனர்.
 
கேரளாவில் 2000 ரூபாய் கலர் ஜெராக்ஸ் கொடுத்து சிறுமி ஒருவர் கடலை மிட்டாய் வாங்கியது. அதே போல் பள்ளி மாணவர்கள் சிலர் கலர் ஜெராக்ஸ் எடுத்து சாக்லேட் வாங்கிவிட்டு மீதி காசும் வாங்கி சென்றது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.
 
இந்நிலையில் வேலூரில் மாங்காய் மண்டியில் ஒருவர் 2000 ரூபாய் கலர் ஜெராக்ஸ் கொடுத்து 250 ரூபாய்க்கு மாங்காய் வாங்கிவிட்டு மீதி 1750 ரூபாயை வாங்கி சென்றுள்ளார். பின்னர் அது கலர் ஜெராக்ஸ் என தெரிந்த மாங்காய் மண்டிக்காரர் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

 


இதில் மேலும் படிக்கவும் :