வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 14 ஜூலை 2015 (02:25 IST)

அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை துவங்கிய கேப்டன் விஜயகாந்த்

அரசியலில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களைத் தொடர்ந்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்துள்ளார்.
 

 
திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை தொடர்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஃபேஸ்புக்கில் இணைந்துள்ளார்.
 
ஜூலை முதல் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கி உள்ளார். அதில், இது, என் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கம், இதன் மூலம் தேமுதிக கட்சியின் அறிவிப்புகள், நிகழ்வுகள் மற்றும் முக்கிய கருத்துகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள உள்ளேன் என தெரிவித்துள்ளார். இந்த பக்கத்தில், ஆங்கிலம் மற்றும் தமிழில் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
 
இந்த பேஸ்புக் பக்கத்தில், கடந்த 12 நாட்களாக அவர் பல்வேறு பதிவுகளை அந்தப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதில், சிறுவர்களுக்கு மது கொடுத்த கொடூரம், ராமநாதபுரத்தில் இப்தார் விருந்தில் விஜயாகாந்த் கலந்து கொண்டது உள்டளிட்டபல பதிவுகளை பதிவு செய்துள்ளார்.
 
தமிழக அரசியலில் எப்போதும் பரபரப்பான கருத்துக்களை முன்வைக்கும் விஜயாகாந்த் ஃபேஸ்புக் பக்கத்திலும் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.