வாங்க...வாங்க... பழ.கருப்பைய்யா: அழைப்புவிடுக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

வாங்க...வாங்க... பழ.கருப்பைய்யா: அழைப்புவிடுக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


K.N.Vadivel| Last Updated: புதன், 3 பிப்ரவரி 2016 (00:06 IST)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பைய்யா காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 
இது குறித்து, சென்னையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழகத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கூட்டணி குறித்து, திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்து குறித்து, அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் தெரிவித்துள்ளோம். இதன் இறுதி முடிவை கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
 
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா எல்லோராலும் மதிக்கப்படக்கூடியவர்.  சில்லரைத் தனங்களை கண்டு பயப்படமாட்டார். எதையும் சந்திக்கும் திறன் படைத்தவர். தேசிய உணர்வு கொண்டவர். எனவே, அவர் காங்கிரஸ் கட்சிக்கு வர வேண்டும் என்றார். 


இதில் மேலும் படிக்கவும் :