வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 10 டிசம்பர் 2015 (08:45 IST)

மழையால் பாதிக்கப்பட்டவர்களை கணக்கெடுக்கும் பணி : 3 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட சேதங்களை கண்டறிந்து நிதி வழங்குவதற்கு வெள்ள நிவாரண கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.


 

 
சமீபத்தில் பெய்த  கன மழையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஏராளமனோர் வீடுகளை இழந்துள்ளனர். டெல்டா பகுதிகளில், நெல் வயல்கள்  சேதமடைந்துள்ளது. மாடுகள் இறந்துள்ளன. 
 
அவர்களுக்கு எல்லம் இழப்பீடு அளிக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். எனவே, பாதிக்கப்பட்டவர்களை கணக்கெடுக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. 
 
முதலில் சென்னையில் அந்த பணி தொடங்கியது.  சுமார் மூவாயிரம் ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மூவாயிரம் அலுவலர்களை கண்காணிக்க 21 மாவட்ட வருவாய் அலுவலர்களும், 21 துணை கலெக்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 10 வட்டங்களில் இந்த கணக்கெடுக்கும் பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.