விஜய்க்கு எந்த கட்சி யாருடன் கூட்டணியில் உள்ளது என்று கூட தெரியாது: ஈபிஎஸ் கலாய்ப்பு..!
நடிகர் விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய் பொதுவெளியில் வந்து மக்களை சந்தித்தால் தான் யதார்த்தம் புரியும் என்றும், அவர் இன்னும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி சாடினார்.
கரூர் சம்பவம் நடந்து 70 நாட்களுக்கு மேலாகியும் விஜய் இன்னும் வெளியே வரவில்லை என்பதையும், நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்து அவருக்கு புரிதல் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் உள்ளன, எந்த கட்சி தேர்தலை தலைமை தாங்கி நடத்துகிறது என்பது கூட தெரியாத ஒருவரை பற்றித் தன்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என்று அவர் அதிரடியாகக் கூறினார்.
மேலும், அதிமுகவின் பலம் குறித்து பேசிய அவர், என்.டி.ஏ கூட்டணியில் தமிழகத்தில் அதிமுகதான் தலைமை தாங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே தெளிவாக கூறிவிட்டதாகத் தெரிவித்தார். எனவே, கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை என்றும், அதிமுக தலைமையிலான கூட்டணிதான் வரும் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
Edited by Siva