வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சி.ஆனந்தகுமார்
Last Updated : சனி, 2 ஏப்ரல் 2016 (17:15 IST)

தேர்தல் நடத்தை விதியை மீறி நபருக்கு ரூ.5000 கொடுத்த திமுக : கரூரில் பரபரப்பு

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ 5 ஆயிரம் நிதியாக கொடுத்த தி.மு.க மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 


 

 
கரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு மத்தியில் தற்போது தி.மு.க கட்சியானது விறுவிறுப்பாக செயல்படும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட கோயம்பள்ளி என்ற பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட சுதாகர் என்பவர் வீட்டிற்கு கரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் ராஜேந்திரன், அங்கே அப்பகுதிக்கு சென்று ஆறுதல் கூறி ரூ 5 ஆயிரத்தை வழங்கியுள்ளார். 
 
கரூர் மாவட்ட தி.மு.க என்ற பேஸ்புக்கில் இந்த படக்காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும் இதே போல திருமுக்கூடலூர் மறைந்த ரவி என்பவரின் திருமணத்திற்கு திருமண உதவித்தொகைகளை கொடுத்த காட்சியும் தற்போது வைரல் ஆகியுள்ளது. 
 
இதை தட்டிக்கேட்க வேண்டிய அ.தி.மு.க வானது தற்போது தமக்கு சீட்டு கிடைக்குமா? என்ற ஆதங்கத்தில் உள்ளதால், இதை பா.ஜ.க மற்றும் பா.ம.க கட்சிகள் மட்டுமே தட்டிக்கேட்க வேண்டுமென பொதுநல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
மேலும் இது போன்ற செயல்களில் எப்போதும் ஈடுபடாத தி.மு.க, தற்போது தேர்தல் வருவதையடுத்து சீட்டு கேட்பதற்காக கூட இருக்கும் என்கின்றனர் மற்ற தி.மு.க வினர். 
 
எது எப்படியோ உடனுக்குடன் தகவல்களை வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலம் தெரிவிக்கும் அண்ணனின் ஆருயிர் விழுதுகளும், அண்ணனின் நேர்முக உதவியாளர் கோழி செந்திலுக்கு பாராட்டுகள் தெரிவித்து தான் ஆக வேண்டும்.
 
இது போன்ற சம்பவங்கள் ஊடகங்களிலும், வாட்ஸ் அப், பேஸ் புக் மூலம் வெளியானதை தொடர்ந்து, வாங்கல் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் கரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், கரூர் மாவட்ட பொருளாளர் கருப்பண்ணன், தாந்தோன்றி ஒன்றிய செயலாளர் ரகுநாதன் உள்ளிட்ட 3 பேர் மீது வாங்கல் போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
தேர்தல் நடத்தை அமலில் இருக்கும் போது பணம் கொடுத்த விவகாரம் ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்துதான் வழக்கு பதிவு செய்யப்பட்டதே தவிர, அதிகாரிகளும், மற்ற மாற்று கட்சிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் கடந்த சில தினங்களாக இந்த புகார் கிடப்பில் போடப்பட்டு தேர்தல் துறை அதிகாரிகள் மந்தமான நிலையில் இருந்ததோடு மட்டுமில்லாமல், யார் மீதும் வழக்கு பதிய வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.