வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (04:56 IST)

விவசாயிகளுக்கு கல்விச்சுற்றுலா: ஜெயலலிதா அறிவிப்பு

தமிழக விவசாயிகளுக்கு கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, தமிழ சட்டப் பேரவையில், பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:–
 
வேளாண் தொழிலை வளர்ச்சி அடையச் செய்யவும், உணவு உற்பத்தியை பெருக்குவதிலும், உழவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தவும், இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக முன்னேற்றம் காண உரிய நடவடிக்கைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த அரசு எடுத்து வருகிறது.
 
தற்போது, தோட்டக்கலைப் பயிற்சிகளில் நன்கு முன்னேற்றம் கொண்டுள்ள  வெளிநாடுகளுக்கு, தமிழகத்தில் இருந்து சுமார் 100 முன்னோடி விவசாயிகளுக்கு கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும்.
 
மேலும், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் பின்பற்றி வரும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும், உள்நாட்டு கல்விச் சுற்றுலாவுக்கு சுமார் 10,000 விவசாயிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.