புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

சிவாஜியை விட சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி: எடப்பாடி பழனிசாமி கிண்டல்!

சிவாஜியை விட சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி:  எடப்பாடி பழனிசாமி கிண்டல்!
தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். கரூர் மாவட்டத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், "சிவாஜி கணேசனை விட மிகச்சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி," என்று கிண்டல் செய்தார். 
 
மேலும், "செந்தில் பாலாஜி தேர்தலின்போது மக்களுக்கு வெள்ளிக் கொலுசு கொடுப்பார். அவருக்கு அளவுக்கு அதிகமான அதிகாரம் தரப்பட்டுள்ளது. தேர்தல் முடியும் வரை மட்டும்தான் செந்தில் பாலாஜி திமுகவில் இருப்பார். தேர்தல் முடிந்த பின் அவர் எந்தக் கட்சியில் இருப்பார் என்பது அவருக்கே தெரியாது," என்றும் விமர்சித்தார். 
 
"கரூரில் தினமும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மணல் திருட்டு நடைபெறுகிறது. செந்தில் பாலாஜியால் தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியாது," என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva