இறப்பு விகிதம் குறைவு: மார்தட்டும் ஈபிஎஸ்? உண்மை என்ன??

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 29 மே 2020 (13:46 IST)
வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாகவுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாகவே சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரிந்ததே. இருப்பினும் சென்னையிலும் சரி தமிழகத்திலும் சரி கொரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கை குறைவாக இருந்தது பொதுமக்களுக்கு ஆறுதல் அளித்தது. 
 
இந்நிலையில் சென்னை மக்களுக்கு பேரதிர்ச்சியாக கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 6 மண்டலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது எனவும் வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாகவுள்ளது எனவும், கொரோனாவை பற்றி மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். ஆனால் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :