1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sivalingam
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2017 (23:01 IST)

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி தோற்பார். சொல்வது ஓபிஎஸ் இல்லை, அன்பழகன்

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ் தான் முதல்வர் ஆவார் என பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் எண்ணியிருந்த நிலையில் திடீரென எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.


எடப்பாடி பழனிச்சாமியால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாது என ஓபிஎஸ் தரப்பு நம்பிக்கை தெரிவித்திருக்கும் நிலையில் நாளை மறுநாள் நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடியார் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்

இன்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் க.அன்பழகன் கூறியபோது ''நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வாய்ப்பில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக யாருக்கும் ஆதரவளிக்காது. தமிழகத்தின் எதிர்காலம் திமுகவின் வெற்றியைப் பொறுத்தே அமையும்'' என்று கூறினார்.

வரும் 18-ம் தேதி பெரும்பான்மை வாக்கெடுப்புக்காக சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், க.அன்பழகனின் இந்தக் கருத்து அரசியல் நோக்கர்களை கூர்ந்து கவனிக்க வைத்துள்ளது.