மீண்டும் மருத்துவர் குழுவுடன் ஆலோசனை! முதல்வரின் அடுத்த கட்டம் திட்டம்?

Last Updated: சனி, 30 மே 2020 (08:46 IST)

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக இரண்டாவது முறையாக இன்று மீண்டும் மருத்துவர் குழுவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் முதல்வர்.

இந்தியாவில் மார்ச் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மூன்று முறை நீட்டிக்கப்பட்டு தற்போது மே 31 ஆம் தேதி வரையிலான நான்காவது ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு நாளையோடு முடிய இருக்கும் நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தினசரி 700 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய தமிழக எண்ணிக்கை 19,000 ஐ தாண்டியுள்ளது. இதனால் எப்படியும் மேலும் இரு வாரங்களுக்காவது ஊரடங்கு நீட்டிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மருத்துவர் குழுவை சந்தித்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அந்த ஆலோசனையில் முக்கியமாக தமிழகம் முழுவதும் கொரோனா முழுவதும் கட்டுக்குள் வரும் வரை பொதுப்போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது என மருத்துவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக மருத்துவர் குழுவை முதல்வர் சந்திப்பதால் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :