வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : புதன், 18 மார்ச் 2015 (17:34 IST)

விஜயகாந்த் மார்க்கெட்டில் இல்லை - துரைமுருகன்

தேமுதிக என்ற கட்சி இப்போது உள்ளதா? என தெரியவில்லை. விஜய்காந்தும் மார்கெட்டில் இல்லை என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 
ராணிப்பேட்டையில் நடந்த நகர திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
 
அப்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
 
"சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை உறுதி என்பதால் அதிமுக தலையில்லாத கட்சியாகிவிடும். எனக்கு வாழ்க்கை கொடுத்தது ராணிப்பேட்டை. 1977 - 1980ம் ஆண்டு நான் இங்கு வெற்றி பெற்றேன். எம்.ஜி.ஆர். என்னை படிக்க வைத்து, 25 பவுன் தங்க செயின் கொடுத்து திருமணம் செய்து வைத்தார். ஆனாலும் நான் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் திமுகவில் தான் இன்றுவரை இருக்கிறேன்.
 
வரும் 2016 பொதுத் தேர்தலில் திமுகதான் ஆட்சி அமைக்கவுள்ளது. தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் மார்க்கெட்டில் இல்லை. இப்போது நான்காகியிருக்கும் காங்கிரஸ் தேர்தலுக்கு முன்பு எட்டாகிவிடும். மோடியை மக்கள் போடி என்று சொல்லி விடுவார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு பஜனை பாடுவதற்கு கூட ஐந்து பேர் இல்லை.
 
மேலும், அதிமுக தலைவருக்கு வழக்கில் தண்டனை நிச்சயம் என்பதால் அந்த கட்சி தலையில்லாத கட்சியாக போகிறது என்றும், நாம் 2016ல் எளிதாக வெற்றி பெறப்போகிறோம்" என்று கூறினார்.