செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 13 மே 2016 (17:31 IST)

குடிப்பவர்களின் ஓட்டு எங்களுக்கு வேண்டாம்: வைகோ அதிரடி

தமிழகத்தில் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் குடிப்பவர்களின் 30 சதவீத ஓட்டு எங்களுக்கு வேண்டாம் என தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறியுள்ளார்.


 
 
தமிழக சட்டசபை தேர்தலில் அனைத்து கட்சிகளும் முன் வைக்கும் ஒரே விஷயம் மதுவிலக்கு ஒன்று தான். இந்நிலையில் சாத்தூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட வைகோ, “எங்கே போனாலும் மதுவிலக்கு பற்றி பேசுகிறீர்கள், போராடுகிறீர்கள், இதனால் நமது அணிக்கு வரவேண்டிய குடிமகன்கள் ஓட்டுல 30% நமக்கு போடாம போயிரப் போராங்க” என தனக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாக கூறினார்.
 
அதற்கு, “போகட்டும்யா, எங்களுக்கு மதுவால் மக்கள் அழியக் கூடாது, அவரின் குடும்பம் பாதிக்கப்படக் கூடாது அவ்வளவு தான், எங்கள் கொள்கை தான் எங்களுக்கு பெரிதே தவிர, ஓட்டு கிடையாது என வைகோ கூறியாதாக வைகோவே பேசினார்.
 
முன்னதாக மதுவிலக்கு விவகாரத்தில் திமுக, அதிமுக கட்சிகள் மக்களை ஏமாற்றுகின்றன எனவும், மக்களின் நலனில் அக்கறை இல்லாமல், தங்களின் நலனுக்காக மட்டுமே அரசியல் செய்து வருகின்றனர் எனவும் குற்றம் சாட்டினார்.