1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 7 நவம்பர் 2015 (00:52 IST)

பெருமாள் முருகனுக்கு விருது கொடுக்க கூடாது: ஜி.கே.நாகராஜ் ஆவேசம்

மாதொரு பாகன் புத்தகத்திற்கு இலக்கிய விருது வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் என கொங்குநாடு ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
 

 
இது குறித்து, கொங்குநாடு ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற ஸ்தலமான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் புனிதத்தன்மையைக் கெடுக்கும் விதத்திலும், அக்கோயிலின் இலட்சக்கணக்கான பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையிலும்,தமிழர் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அவமதிக்கும்  வகையில் புத்தகம் எழுதிய பெருமாள் முருகனுக்கு வழங்கப்படவுள்ள இந்தியமொழி இலக்கியங்களுக்கான சமன்வய பாஷை சம்மன் விருதை ரத்துசெய்ய வேண்டும். மாதொரு பாகன் புத்தகத்தை தடை செய்ய வேண்டும்.
 
மதுவின் தீமைகளை பாடலாக பார்ப்போர் கலங்கும் வண்ணம் பாடல் மூலமாக வெளிப்படுத்திய பாடலாசிரியர் கோவனனை, தேசவிரோதச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த தமிழக அரசு, இலட்சக்கணக்கான மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் புத்தகம் எழுதிய மாதொரு பாகன் புத்தக ஆசிரியர் பெருமாள் முருகனுக்கு பரிசு வழங்கி, பாராட்டு பத்திரம் ILF (இந்திய மொழிகளுக்கான விழா) வழங்குவதை    தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?
 
எனவே, மாதொரு பாகன் புத்தகத்திற்கு இலக்கிய விருது வழங்குவதை தமிழக அரசு தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
 
மேலும், இந்த கோரிக்கையை முன்வைத்து, தமிழக முதல்வர் மற்றும் இந்தியப் பிரதமருக்கு கொங்குநாடு ஜனநாயக கட்சி சார்பில் கடிதம் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.