200 இடங்களுக்கு மேல் திமுக வெற்றி பெறும்.. ஜோசியம் எல்லாம் சொல்ல முடியாது: அமைச்சர் எ.வ.வேலு
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றும், அதிமுக அமைத்துள்ள கூட்டணி வலுவான கூட்டணியா இல்லையா என்பது குறித்து ஜோசியம் சொல்ல முடியாது என்றும் அமைச்சர் ஏ.வ. வேலு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தற்போது தேர்தல் பரப்புரையில் இருக்கும் நிலையில், தனது அதிமுக தலைமையிலான கூட்டணி வலுவான கூட்டணி என்று கூறி வருகிறார். இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஏ.வ. வேலு, "2026-ல் எடப்பாடி பழனிச்சாமி அமைப்பது வலுவான கூட்டணியா, அல்லது நஞ்சு போன கூட்டணியா, மொத்தமாக தோற்க போகும் கூட்டணியா என்றெல்லாம் ஜோசியம் சொல்ல முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "எங்களைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. முதலமைச்சர் கூறியது போல் 200 இடங்களுக்கு மேல் நாங்கள் வெற்றி பெறுவோம்" என்று அமைச்சர் எ.வ.வேலு கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
Edited by Mahendran