வைகோ-வை வெட்டுவேன் என கூறிய திமுக பிரமுகர் கைது


K.N.Vadivel| Last Modified வெள்ளி, 8 ஜனவரி 2016 (22:40 IST)
பொதுச் செயலாளர் வைகோ-வை வெட்டுவேன் என கூறிய திருமங்கலம் நகராட்சித் முன்னாள் தலைவர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
 
 
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திருமங்கலம் திமுக முன்னாள் நகராட்சித் தலைவர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவ ர் பேதுகையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் கைகளை வெட்டுவேன் என்றார். மேலும், முதல்வர் ஜெயலலிதா குறித்தும் ஆபாசமான கருத்துக்களை பேசினார்.
 
ராஜேந்திரனின் ஆபாச பேச்சு குறித்து அதிமுகவைச் சேர்ந்த சவுந்தர் என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில், திமுக முன்னாள் திருமங்கலம் நகராட்சித் தலைவர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பிவைத்தனர். 


இதில் மேலும் படிக்கவும் :