திமுக கூட்டணி தொகுதி பங்கீடு: குழு அமைப்பு

திமுக கூட்டணி தொகுதி பங்கீடு: குழு அமைப்பு


K.N.Vadivel| Last Modified திங்கள், 21 மார்ச் 2016 (23:37 IST)
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
 
இது குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் சட்ட மன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். தமிழக சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கு 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 
 
அதில், 1. பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் (மாநிலத் தலைவர்) 2. கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ( படத்தில் இருப்பவர்) 3. எம்.எஸ்.ஏ. ஷாஜகான், 4. எம். அப்துல் ரஹ்மான் (முன்னாள் எம்.பி.,) 5. எச். அப்துல் பாசித் (முன்னாள் எம்.எல்.ஏ.,) 6. வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் ஆகிய 6 பேர் இடம் பெற்றுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :