திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 ஜூன் 2025 (12:26 IST)

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

anna arivalayam
2026ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுக சார்பில் சில முன்னாள் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் வேட்பாளர்களாக களமிறங்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
திமுக இதுவரை இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்ததே இல்லை என்ற வரலாறு இருக்கும் நிலையில், அதை முதல் முறையாக உடைக்க திட்டமிட்டு வருகிறது.
 
குறிப்பாக, கூட்டணியை உடைக்காமல் பாதுகாத்துக் கொள்வது, வித்தியாசமான வேட்பாளர்களை களமிறக்குவது, புதிய தலைமுறை வாக்காளர்களை கவர்வதற்கான திட்டங்களை செயல்படுத்துவது ஆகியவற்றில் திமுக கவனம் செலுத்துகிறது.
 
அந்த வகையில், முக்கிய துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இந்த முறை வேட்பாளர்களாக களம் இறக்க திமுக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி, அவர்கள் வெற்றி பெற்றால் அமைச்சர்களாகவும் நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
கருணாநிதி காலத்திலிருந்து திமுக தலைமையின் குடும்பத்திற்கு நெருக்கமாக இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியல் எடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் சிலர் வேட்பாளராகலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, திருவாரூர்  மற்றும் சென்னை ஆகிய  இந்த இரண்டு தொகுதிகளில் ஐஏஎஸ் வேட்பாளர்கள் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
Edited by Mahendran