வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 4 நவம்பர் 2015 (13:12 IST)

கருணாநிதியின் அறிவிப்பு மிகப்பெரிய பரிசு: மு.க.ஸ்டாலின் கருத்து

திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பொருத்தமானவர் என்று கருணாநிதி அறிவித்திருப்பது மிகப்பெரிய பரிசு என்று திமுக பொருளாளர்  மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


 

 
மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் "நமக்கு நாமே" விடியல் மீட்பு பயணம் செய்து வருகிறார்.
 
அதன்படி, நேற்று திருப்பத்தூரில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர் தொடர்ந்து ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், அணைக்கட்டு, வேலூர் பகுதியில் பொதுமக்கள், விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டார்.
 
பின்னர்,  மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்:-
 
கேள்வி:– திமுக தலைமை பொறுப்புக்கு மு.க.ஸ்டாலின் தகுதியானவர் என்று கருணாநிதி கூறி உள்ளாரே?
 
பதில்:– திமுக தலைவர் கருணாநிதிக்கு எப்போதும், ஸ்டாலின் மீது நம்பிக்கை அதிகம். கருணாநிதி உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்.
 
நான் உழைக்க கூடியவராக இருப்பதால் அவ்வாறு கூறியுள்ளார். அவர் அறிவித்திருப்பது மிகப்பெரிய பரிசு. இதைவிட பெரிய பரிசு எதுவும் இல்லை.
 
கேள்வி:– விடியல் மீட்பு பயணம் குறித்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறீர்கள். பொதுமக்கள் அதிகமாக கூறும் கருத்து என்ன?
 
பதில்:– பொதுமக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதிமுக ஆட்சியை அகற்ற நம்பிக்கையோடு உள்ளது" இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.