வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: சனி, 7 பிப்ரவரி 2026 (11:41 IST)

காங்கிரஸ் போனா போகட்டும்!.. திமுக தலைமை எடுத்த முடிவு!.. அரசியல் பரபர!...

stalin rahul
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவுக்கும் காங்கிரஸ்க்கும் இடையே கூட்டணி பேச்சு வார்த்தை இதுவரை உறுதியாகவில்லை. இந்த முறை 41 தொகுதிகள், இரண்டு ராஜ்ய சபா தொகுதிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவீதம் என  என காங்கிரஸ் டிமாண்ட் வைக்கிறது. முக்கியமாக ஆட்சி மற்றும் அதிகாரத்தில் எங்களுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்கிற முக்கிய டிமாண்டையும் காங்கிரஸ் வைத்திருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்றால் 35 தொகுதிகளை கொடுங்கள் என காங்கிர்ஸ் கேட்கிறதam.

ஆனால், இவை எதையுமே ஏற்க திமுக தலைமை தயாராக இல்லை என்கிறார்கள். காங்கிரஸ் உடனான கூட்டணி இதுவரை முடிவாகாமல் இருப்பதல்தான் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை இதுவரை அமைக்காமல் இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். ஒருபக்கம் விஜயின் தவெக பக்கம் சென்று விடலாமா எனவும் காங்கிரஸ் யோசித்து வருகிறது. காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியிலும் தவெக ஈடுபட்டு வருகிறது..

திமுகவுக்கு இது தலைவலி என்றால் ஒரு பக்கம் கூட்டணியில் உள்ள கட்சிகள் இரட்டை இலக்கு தொகுதிகளை கேட்டு நச்சரித்து வருகிறார்கள். இது எல்லாவற்றையும் சேர்த்து கணக்குப் போட்ட திமுக தலைமை காங்கிரஸ் போனால் போகட்டும் என நினைக்கிறதாம். எப்படியும் காங்கிரஸுக்கு 25 தொகுதிகளை திமுக கொடுக்கும். காங்கிரஸ் கூட்டணியில் இல்லை என்றால் அந்த 20 தொகுதிகளை மற்ற கட்சிகளுக்கு பிரித்து கொடுத்து விடலாம் என கருதுகிறதாம்.

காங்கிரஸ் என்ன முடிவெடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..