1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (17:12 IST)

ஜெயலலிதா நலம் பெற கருணாநிதி வாழ்த்து: அரசியல் ஆச்சரியம்!

ஜெயலலிதா நலம் பெற கருணாநிதி வாழ்த்து: அரசியல் ஆச்சரியம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சரியாகிவிட்டாலும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.


 
 
அவர் உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப பிரதமர் மோடி உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
 
தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் எதிரும் புதிருமாக இருக்கும் அரசியல் தலைவர்கள். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று தனது பணியினை தொடர திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.