1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 19 செப்டம்பர் 2015 (00:02 IST)

திமுக தலைவர் கருணாநிதியின் திருவாரூர் பயணம் திடீர் ரத்து

திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் செல்ல இருந்த பயணம் திடீர் என ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

 
து குறித்து, திமுக தலைமை கழகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
விரைவில் நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் முக்கியமான பணியில் தாமதம் ஏற்படக் கூடாது என்பதால்,  செப்டம்பர் 27ஆம் தேதி திருவாரூர் மாவட்டச் சுற்றுப் பயண நிகழ்ச்சிகளை மேலும் சில நாட்கள் ஒத்தி வைத்து நடத்திக் கொள்ளலாம் என்று கருத்து கூறப்பட்டது.
 
இதை ஏற்று, திமுக தலைவர் கருணாநிதியின் திருவாரூர் மாவட்டச் சுற்றுப் பயண நிகழ்ச்சிகள் அனைத்தும் சில நாட்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.