டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம்! – திமுக அறிவிப்பு

Prasanth Karthick| Last Modified வியாழன், 3 டிசம்பர் 2020 (11:27 IST)
வேளாண் மசோதாவிற்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது.

மத்திய அரசின் வேளண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாய குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரியும் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் எதிர்வரும் 5ம் தேதி கருப்பு கொடி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களின் முக்கிய நகரங்களில் திமுகவினர் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி கருப்பு கொடி போராட்டத்தை நடத்த வேண்டும் எனவும், பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :