திமுக கூட்டணியில் விசிக: முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததாக திருமாவளவன் தகவல்!

thirumavalavan
முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததாக திருமாவளவன் தகவல்!
siva| Last Updated: திங்கள், 1 மார்ச் 2021 (21:06 IST)

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்கனவே ஒப்பந்தம் ஆகிய நிலையில் சற்று முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அண்ணா அறிவாலயம் வருகை தந்தார்

திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை கடந்த சில மணி நேரங்களாக நடந்த நிலையில் முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது என்றும் நாளையும் பேச்சுவார்த்தை தொடரும் என்றும் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்
மேலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது தனி சின்னத்தில் போட்டியிடுவதா என்பது குறித்து தொகுதி பங்கீடு முடிவு செய்த பின்னர் அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

எனவே நாளை திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :