வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 29 அக்டோபர் 2015 (14:56 IST)

எங்களுடைய வளர்ச்சியை தடுக்கிறார்கள், திமுகவுடன் கூட்டணி இல்லை: திருமாவளவன்

திமுக, அதிமுக, பாரதியஜனதா, காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்பேது இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.


 

 
ஆங்கில் நாளேடு ஒன்றுக்கு திருமாவளவன் பேட்டியளித்தார். அப்போது, தலித் விவகாரத்தில் திராவிட கட்சிகளின் செயல்படு குறித்த கேள்வி ஒன்றுக்கு திருமாவளவன் பதில்கூறி கூறுகையில், "திராவிட கட்சிகளை இந்த விஷயத்தில் பெரிதாக எதுவும் குற்றம் சொல்வதற்கு இல்லை என்றும் ஆனால் கூட்டணி கட்சிகளிடம் அவர்கள் நடந்து கொள்வது வேறு மாதிரி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
 
தாங்கள், திமுக வுடன் 12 ஆண்டுகள் கூட்டணி வைத்திருந்ததாகவும் அவர்களுடன் விசுவாசத்துடன் இருந்ததாகவும், ஆனால் அவர்கள் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் எப்போது இடைதேர்தல் வந்தாலும் அவர்கள் தங்களை அழைத்து பேசாமல் புறக்கணித்ததாகவும் கூறியுள்ளார்.
 
தர்மபுரியில் நடந்த இளவரசன் விவகாரத்தில், பாமக தங்களை கடுமையாக விமர்சித்த போது, அதை திமுக கண்டுகொள்ளவில்லை. அதேபோன்று தலித் என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் இதுவரை திமுக தனது கருத்தை சொல்லவில்லை என்றும் திராவிட கட்சிகள் இதில் ஒதுங்கியே இருப்பதாகவும் குற்றம் சாற்றினார்.
 
இந்நிலையில், திராவிட கட்சிகள் மனிதாபிமான அடிப்படையில்கூட, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும்  தன்னை தாக்குவதற்கு முயற்சி நடந்தபோதும் அது குறித்து எதுவும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.
 
திராவிட கட்சிகள், சமூக நீதி பற்றி பேசுகிறார்கள், ஆனால் அவர்கள் கட்சியில் கூட தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்றும் திமுகவிலும், அதிமுகவிலும் மாவட்ட செயலாளர் பதவிகூட தலித்துகளுக்கு வழங்கவில்லை என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
 
மற்றொரு கேள்விக்கு பதிலலித்த திருமாவளவன், "திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
 
திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி கட்சிகளை பயன்படுத்திவிட்டு தூக்கி எரிவதை வழக்கமாக கொண்டுள்ளன.
 
பெரிய சகோதரன் மனப்பாண்மையில் அவர்கள் செயல்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். அவர்கள் சில இடங்களை கொடுத்து விட்டு எங்களுடைய வளர்ச்சியை தடுக்கிறார்கள்" என்று திருமாவளவன் கூறினார்.