1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Webdunia
Last Updated : புதன், 6 மே 2026 (12:31 IST)

தேர்தலுக்கு மட்டுமே திமுகவுடன் கூட்டணி.. தேர்தல் முடிந்தவுடன் கூட்டணியும் முடிந்துவிட்டது: மாணிக்கம் தாகூர்...!

தேர்தலுக்கு மட்டுமே திமுகவுடன் கூட்டணி.. தேர்தல் முடிந்தவுடன் கூட்டணியும் முடிந்துவிட்டது: மாணிக்கம் தாகூர்...!
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் நிலையில், திமுகவுடனான கூட்டணி சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி மட்டுமே என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அதிரடியாக தெரிவித்துள்ளார். 
 
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்க இன்னும் 11 பேரின் ஆதரவு த.வெ.க-விற்கு தேவைப்படுகிறது.
 
இதற்காக காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் த.வெ.க ஆதரவு கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. த.வெ.க-வின் இந்த ஆதரவு கோரிக்கையை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று உறுதிப்படுத்தியிருந்தார். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முடிவெடுத்து அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், த.வெ.க-வுடன் ஆட்சி அமைப்பது குறித்து நேற்று இரவு காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆலோசித்ததாக கூறினார். காங்கிரஸின் இந்த முக்கியமான முடிவை சற்று நேரத்தில் கட்சிப் பொதுச்செயலாளர் கிரிஷ் சோடங்கர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நுழைந்துவிடக் கூடாது என்பதே காங்கிரஸின் முக்கிய நோக்கமாக உள்ளது.
 
Edited by Siva