செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2016 (13:02 IST)

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு திமுக, அதிமுக விளம்பர யுத்தம்

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு திமுக, அதிமுக விளம்பர யுத்தம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதால் திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் விதமாக நேற்று முதல்வர் ஜெயலலிதாவை கேலி செய்யவது போல் பிரம்மாண்டமாக விளம்பர யுத்தத்தை ஆரம்பித்தனர். அதில் முதல்வர் ஜெயலலிதா மக்களை சந்திக்காமல் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.


 
 
திமுகவுக்கு நெருக்கமானவர்களால் முக்கியமான அனைத்து தமிழ் நாளிதழ்களிலும் வெளியான அந்த விளம்பரத்துக்கு ரூபாய் 18 கோடி செலவானதாக தகவல்கள் கூறுகின்றன. திமுகவின் இந்த விளம்பரத்துக்கு அதிமுக தரப்பில் இருந்து உடனடியாக தக்க பதிலடி கொடுத்துள்ளனர். திமுகவின் அதே விளம்பர உத்தியில் திமுக தலைவர் கருணாநிதியை கேலி செய்யும் விதமாக அவர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
 
தேர்தலை முன்னிட்டு இரு திராவிட கட்சிகளும் வார்த்தை போரிலும், விளம்பர போரிலும் ஈடுபட்டுள்ளன. திமுகவின் விளம்பரத்தில் அதிமுக தலைமையின் செயல்பாட்டையும், அரசாங்கத்தையும் விமர்சித்து முதன்மைபடுத்தி உள்ளது. இந்த ஆட்சி முடியட்டும் உதய சூரியன் விடியட்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
 
முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் அளித்த பரிசுக்கு நிகரான காரமான பரிசை அதிமுகவின் இணையதள பிரிவு திமுகவினருக்கு திருப்பி அளித்துள்ளது.
 
அதிமுகவினரால் வாட்ஸ்-அப் மூலம் பரப்பப்பட்ட கருணாநிதிக்கு எதிரான பழிக்கு பழி போஸ்டர் விளம்பரத்தில் கடந்த ஐந்து வருடத்தில் கருணாநிதியை நடிகைகளின் திருமண விழாவில் பார்த்திருப்பீர்கள், கலை நிகழ்ச்சிகளில் பார்த்திருப்பீர்கள், மானாட மயிலாட நிகழ்ச்சியில் பார்த்திருப்பீங்க. ஆனால் சட்ட சபையில் பார்த்திருக்கீங்களா? அட திருவாரூர் தொகுதியிலாவது பார்த்திருக்கீங்களா.
 
என்னடா இப்படி பண்றீங்களேடா.....! முடியட்டும் திமுக, விடியட்டும் தமிழகம் என கூறியுள்ளனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் திமுக தரப்பு முக்கியமான நாளிதழில்களில் அதிமுக அரசை விமர்சித்து விளம்பரப்படுத்தியுள்ளனர். இந்த விளம்பர யுத்தம் தேர்தல் முடியும் வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.