வியாழன், 5 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 5 பிப்ரவரி 2026 (12:16 IST)

கம்யூனிஸ்ட், மதிமுக மட்டுமே பிரச்சனை இல்லை.. விசிகவின் கோபம்.. தேமுதிகவின் பேரம்.. என்ன செய்ய போகிறது திமுக?

mk stalin
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமை தனது கூட்டணியை தக்கவைக்க பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. ம.தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஆறு இடங்கள் ஒதுக்குவதில் பெரிய சிக்கல் இருக்காது என தெரிந்தாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூடுதல் இடங்களை கோருவது உறுதி. குறிப்பாக, தேமுதிக போன்ற புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வரும்பட்சத்தில், விசிக தொண்டர்களிடையே அதிருப்தி ஏற்பட வாய்ப்புள்ளது.
 
காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படுவதும் களப்பணியில் தொண்டர்களின் உற்சாகத்தை குறைக்கக்கூடும். இருப்பினும், பாமகவை உள்ளே இழுக்காமல் திருமாவளவனுக்காக ஸ்டாலின் காட்டும் நிதானம், ஒரு சமரச புள்ளியாக அமையும் என கருதப்படுகிறது. 
 
மறுபுறம், வலிமையான பாஜக கூட்டணி மற்றும் புதிய வரவான 'தமிழக வெற்றிக் கழகம்' ஆகியவற்றை சமாளிக்க வேண்டிய நெருக்கடியில் திமுக உள்ளது. "திமுகவை யாராலும் அழிக்க முடியாது" என தொண்டர்கள் பெருமை பேசினாலும், வலுவான கூட்டணி அமைந்தால் மட்டுமே வெற்றி என்ற எதார்த்த நிலையிலேயே கட்சி இன்றும் இருக்கிறது. இந்த நெருக்கடிகளை உணர்ந்து திமுக தலைமை வியூகம் வகுக்க வேண்டியது அவசியம்.
 
Edited by Siva