செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 15 மே 2016 (11:53 IST)

வீதிக்கு வந்து இறங்கிய விஜயகாந்த் - தோல்வி பயமா? [விடியோ]

பிரச்சாரம் செய்ய கடைசி நாளான நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், தான் போட்டியிடும் உளுந்தூர்பேட்டையில் வீதி வீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
 

 
வருகின்ற சட்டமன்ற தேர்தலில், உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேலு, அதிமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. குமரகுரு, பாமக சார்பில் பாலு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
 
விஜயகாந்த் போட்டியிடுவதால் உளுந்தூர்பேட்டை தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. இதனிடையே, அந்த தொகுதியில், கடினமான போட்டி நிலவுவதால் விஜயகாந்த் வெற்றிபெறுவது கடினம் என கருத்துக் கணிப்புகள் தகவல் தெரிவித்தன.
 
இந்நிலையில், பிரச்சாரம் செய்வதற்கு கடைசி நாளான நேற்று சனிக்கிழமை [14-05-16] உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த வேனில் சுட்டெரிக்கும் வெயிலில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
முன்னறிவிப்பின்றி விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டதை அந்த தொகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர். இதனால், மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், விஜயகாந்திற்கு தோல்வி பயம் வந்ததாலேயே வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டார் என்று எதிர்கட்சி தரப்பில் குற்றம்சாட்டி உள்ளனர்.

பிரச்சார வீடியோ இங்கே: