தேமுதிகவில் இருந்து எங்களை நீக்கியது செல்லாது: சந்திரகுமார் ஆவேசம்


Suresh| Last Updated: புதன், 6 ஏப்ரல் 2016 (12:32 IST)
தேமுதிக வில் இருந்து தங்களை நீக்கியதாக அறிவித்திருப்பது செல்லாது என்று சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

 

 
மக்கள் நல கூட்டணியுடன், கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை தேமுதிக சந்திக்கும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார்.
 
இதைத் தொடர்ந்து தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வேண்டும் என்று அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலானராக இருந்து சந்திரகுமார் தலைமையில் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் போர் கொடி தூக்கினர்.
 
இந்நிலையில், தேமுதிக அவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.
 
இதைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகுமார் "எங்களை தேமுதிகவை விட்டு நீக்குவதாக அறிவித்திருப்பது செல்லாது" என்று கூறியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :