புதுக்கோட்டையில் குர்பானி கொடுக்கும் விஜயகாந்த்


k.N.Vadivel| Last Modified புதன், 23 செப்டம்பர் 2015 (22:59 IST)
பக்ரீத் பண்டியை முன்னிட்டு, புதுக்கோட்டையில் இஸ்லாமிய மக்களுக்கு குர்பானி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
 
இது குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை, இஸ்லாமிய சமுதாயமக்கள் குர்பானி வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.
 
இந்த திருநாளில்தான், ஏழை, பணக்காரன், இருப்பவர், இல்லாதவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இன்றி தியாகத்தையும், ஈகையையும் போற்றுகின்ற வகையில் இந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில், இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரும், நலமுடனும், வளமுடனும், சம உரிமையும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என இந்த இனிய நாளில் வாழ்த்துகிறேன்.
 
மேலும், கடந்த பல ஆண்டுகளாக நான், இஸ்லாமிய நண்பர்களுடன் இணைந்து, குர்பானி வழங்கி, தியாகத் திருநாளை கொண்டாவது வழக்கம்.
 
அதே போன்று, இந்த ஆண்டும் செப்டம்பர் 24 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10 மணியளவில், புதுக்கோட்டையில் உள்ள அய்யா திருமண மஹாலில், இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு குர்பானி வழங்கி பக்ரீத்தை கொண்டாட உள்ளேன் என தெரிவித்துள்ளார். 
 


இதில் மேலும் படிக்கவும் :