1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 15 ஆகஸ்ட் 2015 (02:50 IST)

தமிழகத்தில் வறுமையை போக்க தேமுதிக பாடுபடும்: விஜயகாந்த் சுதந்திர தின வாழ்த்து

இந்தியாவில் 69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று 69ஆம் ஆண்டில் இந்தியா பெருமையுடன் அடியெடுத்து வைக்கின்றது.
 
நமது நாட்டில், ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி, இந்திய மக்கள் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, இந்த இனிய நாளை சுதந்திர திருநாளாக மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறோம்.
 
ஆனால், விடுதலை பெற்று ஆண்டுகள் பல கடந்தாலும், மக்களின் வறுமைநிலை மாறவில்லை. மதுவின் கோரப்பிடியில் இருந்து மக்களை மீட்கமுடியவில்லை. பூரண மதுவிலக்கை அரசு அமல்படுத்த முன்வரவில்லை.
 
மேலும், நாட்டில், லஞ்சம், ஊழல், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, தண்ணீர் பஞ்சம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு என பல்வேறு பிரச்சினைகளில் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
 
தமிழகத்தில், வறுமை கோட்டிற்குகீழ் மக்களே இல்லை என்கின்ற நிலையை  உருவாக்க வேண்டும் என்ற மிக உயர்ந்த நோகத்திற்காக தேமுதிக பாடுபடும்.
அவர்களை தேமுதிக மீட்கும்.
 
அண்டை நாடுகளின் அச்சுறுத்தல், எல்லைப்புறங்களில் எதிரிகளின் தாக்குதல், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், உள்நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இவை எல்லாவற்றையும் மீறி, உலக அரங்கில் இந்தியா சாதனை படைத்துவருகிறது.
 
வரும் காலங்களில், நமது  நாட்டில் அமைதியும், முன்னேற்றமும் ஏற்பட்டு, வறுமை ஒழிந்திட இந்த சுதந்திரதினம் வழிவகும். அனைவருக்கும், எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.