செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 23 அக்டோபர் 2015 (08:09 IST)

பட்டாசுகளை ரயிலில் எடுத்துச் சென்றால் கடுமையான நடவடிக்கை

பட்டாசுகளை ரயிலில் எடுத்துச்சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே காவலர்கள் எச்சரித்துள்ளனர். 


 

 
சென்னை மூர்மார்க்கெட் மின்சார ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
 
இது குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் அழகர்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்வதைத் தடுக்கும் விதமாகவும், அவர்கள் அறியாமையால் கொண்டு செல்வதை தவிர்க்கும் விதமாகவும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே பணியில் இருக்கும் காவல்துறையினர் பட்டாசு உள்பட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்கிறவர்களை கண்காணிப்பார்கள்.
 
தீபாவளி சமயத்தில் இதற்கென்று தனிப்படை ஒன்று அமைக்கப்படும். கடந்த ஆண்டு பட்டாசுகளை எடுத்துச்செல்ல முயன்ற 25 பேரை கண்டித்து, தலா ரூ.1,000 அபராதம் விதித்தோம். இந்த ஆண்டு தீவிரமாக கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.