1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 15 டிசம்பர் 2015 (16:34 IST)

பேல்பூரி, தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்த பள்ளி கல்வித்துறை வலியுறுத்தல்

மாணவ, மாணவியரின், உடல் நலனை கருதி, பள்ளிகளுக்கு முன்பாக விற்கும் பேல்பூரி போன்ற சுகாதாரமற்ற எந்த ஒரு உணவு பொருளையும் வாங்கி உண்ணக் கூடாது என்றும் தள்ளுவண்டி போன்ற இதர சிறு கடைகள் ஏதேனும் இருந்தால், அதனை அப்புறப்படுத்த தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்திள்ளார்.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, பள்ளி மாணவர்கள் அனைவரும் குடிநீரை காய்ச்சி அருந்துமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு முன்பாக விற்கும் பேல்பூரி போன்ற சுகாதாரமற்ற எந்த ஒரு உணவு பொருளையும் வாங்கி உண்ணக் கூடாது என அறிவுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கு அருகாமையில், தள்ளுவண்டி போன்ற இதர சிறு கடைகள் ஏதேனும் இருந்தால், அதனை அப்புறப்படுத்த தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
 
பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டி, நீர்த்தேக்க தொட்டிகளில், ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் சுகாதார அலுவலர்கள் மூலம் குளோரின் கலந்து நீரை சுத்தம் செய்ய வேண்டும் 
 
பள்ளி, மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தும் அனைத்து கழிவறைகளிலும், பிளிச்சிங் பவுடர் (Bleeching Powder) தெளித்து சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்