புதன், 18 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

விஜய்யை நம்பி நாட்டை ஒப்படைத்தால் குத்தாட்டம் தான் போடுவார்.. திட்டங்கள் எதுவும் நடக்காது.. திண்டுக்கல் லியோனி

Vijay Vs Leoni
தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் சமீபத்திய அரசியல் செயல்பாடுகள் மற்றும் அவரது மேடை நடனம் குறித்து திண்டுக்கல் லியோனி முன்வைத்துள்ள விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசிய லியோனி, சமீபத்திய கூட்டத்தில் விஜய் ஆடிய நடனத்தை கடுமையாகச் சாடினார்.
 
புதிதாகக் கட்சி தொடங்கியுள்ள விஜய், ஒரு பொறுப்பான தலைவராக செயல்படாமல் விளையாட்டுத்தனமாக நடந்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாக, தகர டப்பா, பவழவிழா பாப்பா" என்ற விமர்சனமும், அவர் குத்தாட்டம் போட்டதைச் சுட்டிக்காட்டிய லியோனி, இவரை நம்பி நாட்டை ஒப்படைத்தால் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் நடக்காது என்றும், நாடு முழுவதும் குத்தாட்டம் தான் அரங்கேறும் என்றும் விமர்சித்தார்.
 
திமுகவின் சாதனைகளுக்கு முன்னால் விஜய்யின் அரசியல் யுக்திகளோ அல்லது திமுகவை எதிர்த்துப் பேசும் சந்தர்ப்பவாதக் கூட்டணிகளோ எடுபடாது என்று அவர் தெரிவித்தார். 
 
விஜய்யின் இத்தகைய நடவடிக்கைகள் அவர் எப்படிப்பட்டவர் என்பதை மக்களுக்குத் தெளிவாகக் காட்டிவிட்டதாகவும், வரும் தேர்தலில் மக்கள் மீண்டும் மு.க. ஸ்டாலினையே முதல்வராக்குவார்கள் என்றும் லியோனி நம்பிக்கை தெரிவித்தார்.  
 
Edited by Siva