இந்த இரண்டில் ஒன்று தான்: ஓபிஎஸ் மகன் பிரதீப் போட்டியிடும் தொகுதி!

jaya pradeep
இந்த இரண்டில் ஒன்று தான்: ஓபிஎஸ் மகன் பிரதீப் போட்டியிடும் தொகுதி!
siva| Last Updated: புதன், 3 மார்ச் 2021 (21:00 IST)
தமிழக துணை முதலமைச்சர் மகன் ரவீந்திரநாத் குமார் ஏற்கனவே தேனி தொகுதியில் எம்பி ஆகியுள்ள நிலையில் அவருடைய இளைய மகன் பிரதீப் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்

அவருக்காகக் 3 தொகுதிகளில் விருப்ப மனுக்களை அதிமுக தொண்டர்கள் கொடுத்துள்ளனனர். தேனி மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சென்னையில் உள்ள கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் பிரதீப் சார்பாக விருப்ப மனு கொடுக்கப்பட்டுள்ளது

இருப்பினும் பிரதீப் கொளத்தூர் அல்லது வில்லிவாக்கத்தில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஒருவேளை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டால் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது மகனை பாதுகாப்பான உசிலம்பட்டியில் நிறுத்துவாரா? அல்லது ரிஸ்க்கான தொகுதியான கொளத்தூரில் நிறுத்துவாரா? துணை முதல்வர் ஓபிஎஸ் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :