தொடர்புடைய செய்திகள்
- அமலாக்கத்துறையால் தேடப்படும் ஜான் பிரிட்டோ ஆதவ் அர்ஜூனா குடும்பத்தை சேர்ந்தவரா? ஒரு விளக்கம்...!
- தந்தையை கைவிட்ட மகன்களுக்கு சிறை, அபராதம்!.. 84 வயசில் கேஸ் போட்டு தீர்ப்பு வாங்கிய தாத்தா!..
- திருச்சி த.வெ.க-வில் வாரிசு போட்டி: கு.ப.கிருஷ்ணன் VS வெல்லமண்டி நடராஜன்! புஸ்ஸியின் ராஜதந்திரம்
- எதிர்க்கட்சி கூட இல்லை.. இனிமேலும் அமைதியாக இருக்க கூடாது.. யூடியூப் சேனல் தொடங்குவோம்: எடப்பாடி பழனிசாமி
- என்னை கொலை செய்ய கூலிப்படை!. அருண்குமார் ஐபிஎஸ் மீது சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு!...
கடந்த ஆட்சியில் பழிவாங்கப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.. தவெக அரசு அதிரடி உத்தரவு...
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட உயர் அதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்கள் தற்பொழுது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. துறையின் மூன்று இணை ஆணையர்கள் தற்பொழுது கூடுதல் ஆணையர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதில் இரண்டு அதிகாரிகள், கடந்த கால அரசியல் பழிவாங்கலுக்கு பலியானவர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் ஏழை ஜோடிகளுக்கு நடத்தப்பட்ட இலவச திருமண விழாவில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அப்போது நிஜமாக தப்பு செய்தவர்கள் தப்பித்துவிட, இந்த இரு அதிகாரிகள் மட்டும் பலிகடா ஆக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சுமார் இரண்டு ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகே அவர்கள் மீண்டும் பணியில் சேர்ந்தனர்.
கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இந்த அதிகாரிகளின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் நகர்வுகள் இந்த ஆட்சியில் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Edited by Siva
