1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 10 செப்டம்பர் 2015 (15:41 IST)

தேனி மாவட்டத்தில் பாதிரியாரை கைது செய்யக்கோரி இந்து அமைப்பினர் போராட்டம்

தேனி மாவட்டம் உத்தம பாளயத்தில் உள்ளூர் மக்களுக்கும் கிறிஸ்தவ பாதிரியாருக்கும் இடையே வார்த்தை மோதல்களும், தாக்குதல்களும் நடப்பதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்து கடவுள்களையும் சிலைகளையும் தவறாக சித்தரித்து துண்டுபிரசுரங்களை விநியோகித்தும் வருவதாக கிறிஸ்தவபாதிரியாரை ஒருவரை கைது செய்ய வேண்டும் என பல்வேறு இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அந்த துண்டு பிரசுரங்கள் இந்து கடவுளை அவமதித்து, எரிச்சலூட்டும் வகையில் உள்ளன என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கிறிஸ்தவ பாதிரியார் மீது பல்வேறு புகார்கள் வருகின்றன, மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம், பாதிரியாரை கைது செய்ய வேண்டுமென்றால் புலனாய்வு தலைமையகத்தின் அனுமதியை பெற வேண்டும் என எஸ்பி-சிஐடி இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

இந்நிலையில் பாதிரியார் இந்து கடவுள்களைப் பற்றி தவறாக பரப்புரை செய்ததால் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக உத்தமபாளையம் காவல் துறையினர் தெரிவித்தனர்.

பாதிரியரின் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் மூன்று பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். கைது தொடர்பான தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அவர்களை விடுவிக்க கோரினர், மேலும் பாதிரியாரை கைது செய்யவும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் தேனி மாவட்ட இந்து முன்னனி தலைவர் ராமராஜ் பாதிரியாரை கைது செய்யவில்லை என்றால் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.