வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : வியாழன், 20 ஏப்ரல் 2017 (07:23 IST)

தினகரனை தேடி வீட்டுக்கே வந்துவிட்ட டெல்லி போலீஸ்! அரெஸ்ட் எப்போது?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்து கட்சியின் சின்னமும் பெயரும் முடக்கப்பட்டது. இந்நிலையில் சசிகலா அணியை சேர்ந்த தினகரன் கட்சியின் சின்னமான இரட்டை இலையை கைப்பற்ற குறுக்கு வழியில் முயன்றார். சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் ரூ.60 கோடி வரை பேரம் பேசி ரூ.1.30 கோடி சின்னத்திற்காக லஞ்சம் கொடுக்க தினகரன் முன்வந்ததாகவும், தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டது.



 


இதுகுறித்து தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தினகரனை விசாரணை செய்ய நேற்று டெல்லி போலீசார் தினகரன் வீட்டுக்கு வந்தனர்.

ஆனால் தினகரன் ஆதரவாளர்கள் டெல்லி போலீசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டும், தீக்குளிக்கவும் முயன்றதால் விசாரணைக்கு டெல்லி வருமாறு தினகரனிடம் சம்மன் அளித்துவிட்டு டெல்லி போலீசார் சென்றுவிட்டனர். விசாரணைக்காக தினகரன் டெல்லிக்கு சென்றால் அங்கு அவர் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.