வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 24 நவம்பர் 2015 (13:09 IST)

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தம்பதியினரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும்: ராமதாஸ்

சென்னையில் வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தம்பதியினரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


 

 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இரண்டு நாள்களாக தொடர்ந்து, பெய்து வரும் மழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
 
ஏற்கெனவே, மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்கள் இந்த மழையால் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.
 
கெடிலம் ஆற்றிலும், பரவனாற்றிலும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
 
கடலூர் மாவட்டத்தில் எந்தப் பகுதியிலும் மழை நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. சென்னையில் மீண்டும் கொட்டத் தொடங்கியுள்ள மழையால் புறநகர் பகுதிகளின் நிலைமை மேலும் மோசடைந்துள்ளது.
 
எனவே, மழையால் எவருக்கும் பாதிப்புகள் இல்லை என்ற உன்னத நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
 
சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தம்பதியின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
 
அவர்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.