வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 11 டிசம்பர் 2015 (12:52 IST)

டி.எல்.எஃப் வளாகத்தில் 20 பேர் பலியா? : என்ன சொல்கிறது நிர்வாகம்?

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனமான டி.எல்.எஃப் வளாகத்தில் வெள்ளம் புகுந்து சுமார் 20 பேர் வரை இறந்திருக்கலாம் என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால் அதை அந்த நிர்வாகம் மறுத்துள்ளது.


 
 
டிசம்பர் 1 ஆம் தேதி பெய்த மழையின் காரணமாகவும், செம்பரம்பாக்கம்,  போரூர் ஏரிகளில் இருந்தும்,  மணப்பாக்கம், ராமபுரம் கால்வய்கள் வழியாகவும் வெளியேறிய வெள்ளம் டி.எல்.எஃப் வளாகத்திற்குள் புகுந்தது.  அதனால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதில் மூன்று தரைத் தளங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. நீரில் மூழ்கிய தரைத்தளம்  ஒவ்வென்ரும் 23 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 
 
அங்கு மொத்தம் 10 மாடிகள் கொண்ட ஏராளமான கட்டிடங்கள் உள்ளன. மொத்தம் 65 ஆயிரம் ஊழியர் பணியாற்றுகின்றனர்.
 
டி.எல்.எஃப் வளாகத்தில், வெள்ளம் புகுந்தததையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதன் பின் அவர்கள் பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் நிறுத்திச் சென்றிருந்து 600 கார்கள் மற்றும் மோட்டர் சைக்கிள்கள் நீரில் மூழ்கி விட்டன. 
 
இந்நிலையில், வாகனங்கள் நிறுத்தியிருந்த தரைத் தளங்களில், வெள்ளத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்து விட்டதாகவும், சடலங்களை இரவோடு இரவாக, அந்த நிறுவனம் அப்புறப்படுத்தி விட்டது என்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.
 
இதையத்து டி.எல்.எஃப் வளாகத்தில் செய்தியாளர்கள் குவிந்தனர். அதன் பின் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாநகர அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தினர். ஆனால் இறப்பு எதுவும் நடக்கவில்லை என தெரியவந்தது. 
 
இதுபற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய டி.எல்.எஃப் துணை தலைவர் டேவிட் “இங்கே  வெள்ளத்தில் சிக்கி பலர் இறந்துவிட்டனர் என்பது வதந்தி. வெள்ளம் உள்ளே வந்தவுடன், ஊழியர்களை பத்திரமாக வெளியேற்றி விட்டோம். 360 கார்களை நீரில் மூழ்காமல் தடுத்துவிட்டோம். பாதுகாப்பு கருதியே பணியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை” என்று கூறினார்.