1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: செவ்வாய், 21 ஜூலை 2015 (11:49 IST)

தயாநிதி மாறன் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. அதில்,

தயாநிதி மாறன்  பிஎஸ்என்எல்லில் சட்டவிரோத இணைப்புகள் வைத்திருந்த விவகாரம் குறித்து சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில், தயாநிதி மாறனிடம் ஜூலை 1,2,3 ஆகிய நாள்களில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின்போது தயாநிதி மாறன் திருப்தியளிக்கும் வகையில் பதில் அளிக்கவில்லை. இத்தகைய சூழலில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தயாநிதி மாறனுக்கு ஆறு வார காலத்துக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காததால், அவருக்கு வழங்கியுள்ள முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தது.


இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ வழக்கறிஞர்  சீனிவாசனின் குறச்சாட்டை தொடர்ந்து விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.