எடப்பாடி பழனிச்சாமியை நண்பர் என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது: தா.பாண்டியன் ஆவேசம்!

எடப்பாடி பழனிச்சாமியை நண்பர் என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது: தா.பாண்டியன் ஆவேசம்!


Caston| Last Modified புதன், 31 மே 2017 (14:50 IST)
பசு, எருமை, ஒட்டகம் போன்ற விலங்குகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

 
 
கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் இதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து எந்த கருத்தையும் கூறவில்லை. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபொழுது இந்த தடையை பற்றி படித்து பார்த்த பின்னர் பதில் கூறுகிறேன் என்றார். ஆனால் இதுவரை அவரது பதிலை கூறவில்லை.
 
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த கருத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார். மாட்டிறைச்சி தடைக்கு எதிராக கருத்தரங்கம் ஒன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது.
 
இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய தா.பாண்டியன், மாட்டிறைச்சி தடை பற்றி படித்து பார்த்து பதில் சொல்கிறேன் என்று சொல்லும் எடப்பாடி பழனிச்சாமியை நண்பர் என்று சொல்லக் கூட வெட்கமாக இருக்கிறது. ஜெயலலிதாவிற்கு இருந்த துணிச்சலில் 100-இல் ஒரு பங்கு கூட பழனிச்சாமியிடம் இல்லை.


இதில் மேலும் படிக்கவும் :