இன்றும் கனமழைக்கு வாய்ப்பு.. இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்..!
டிட்வா புயல் காரணமாக இன்றும் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள பல இடங்களில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 7 முதல் 11 சென்டிமீட்டர் வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதால் என்றும் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக டிட்வா புயல் மாறி உள்ளதைத் தொடர்ந்து, சென்னையிலும் இன்றும் விட்டுவிட்டு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் இன்றும் அதே போல் மேகமூட்டத்துடன் காணப்பட்டு விட்டு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை, சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் தற்போது காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Edited by Siva