சிதம்பரத்தில் குண்டுவெடிப்பு சம்பவத்தால் பரபரப்பு

Crude bomb explosion in Chidambaram, 4 injured
Geetha Priya| Last Modified ஞாயிறு, 4 மே 2014 (11:03 IST)
சிதம்பரத்தில் உள்ள வீடு ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததில் பல்கலைக்கழக ஊழியர் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.


சென்னை சென்ட்ரலில் இரட்டை குண்ட்டுவேடிப்பு சம்பவத்திற்கு பிறகு சிதம்பரம் உட்பட பல முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு வீடு ஒன்றில் வெடிகுண்டு வெடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தில் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அருள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த வீட்டிலிருந்து டிபன் பாக்ஸ் குண்டு, செல்போன் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.

வீட்டில் இருந்தவர்கள் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுப்பட்டிருக்கலாமென என சந்தேகிக்கும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அந்த வீட்டிலிருந்து ஒரு டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, செல்போன், யுஎஸ்ஏ முத்திரை பதித்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் மேலும் படிக்கவும் :